முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

வெள்ளி, 30 ஜனவரி, 2015

927 ஓவிய ஆசிரியர் பணியிடங்கள் காலி - Dinamalar 30.01.15

திருப்பூர் : தமிழக பள்ளிகளில், காலியாக உள்ள, ஓவிய ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அரசு பள்ளியில், கல்வி பயிலும் மாணவர்களின், கலை மற்றும் கற்பனை திறனை ஊக்கப்படுத்த, ஓவியம், இசை, தையல், எம்ப்ராய்டரி, கலைநுட்பம் சார்ந்த பாடப்பிரிவுகள், தமிழக பள்ளிகளில் துவக்கப்பட்டன. 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஓவிய வகுப்பு நடக்கிறது.தமிழகத்தில் உள்ள நடுநிலை, உயர்நிலைப்பள்ளிகளில், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் என்ற பெயரில், ஓவிய ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். பள்ளிகளில் உள்ள, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழ்நாடு ஓவிய ஆசிரியர் நல சங்க மாநில தலைவர் ராஜ்குமார் கூறுகையில்,'ஆசிரியர்கள் பற்றாக்குறை, குறைவாக ஒதுக்கப்படும் பாடவேளைகளால், தனியார் பள்ளிகளுக்கு போட்டியாக, அரசு பள்ளி மாணவர்களை உருவாக்குவது சிரமமாகிறது. வாரத்தில் இரண்டு பாடப்பிரிவு மட்டுமே தரப்படுகிறது. மாநிலம் முழுவதும், 927 ஓவிய ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தாமதமின்றி, ஓவிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இசை பாடப்பிரிவை துவக்கி, இசை கருவிகளும் வழங்க வேண்டும்', என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக