முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

செவ்வாய், 9 டிசம்பர், 2014

அரசுப்பள்ளிகளில் 'அனிமேஷன்' வகுப்புகளுக்கு சிறப்பு ஆசிரியர்களை நியமனம் செய்ய கல்வித்துறை திட்டம்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 'அனிமேஷன்' வகுப்புகளுக்கு, சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க, கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது. அரசு பள்ளிகளில், கற்றல் திறனை மேம்படுத்தும் பொருட்டு, 'ஸ்மார்ட் கிளாஸ்'கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 

இதன் அடிப்படையில், கணிதம், அறிவியல் உள்ளிட்ட பாடங்களை 'சிடி' வழியாக, 'அனிமேஷன்' வடிவில் பாடம்நடத்த, கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது : 

'அனிமேஷன்' வகுப்புகளை நடத்த, கூடுதலாக சிறப்பு ஆசிரியர்களை, தற்காலிக அடிப்படையில் நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவர்கள், ஒவ்வொரு பாடத்திற்கும் ஏற்ற 'சிடி'க்களை தேர்வு செய்து திரையிடுவது மற்றும் 'அனிமேஷன்' தொடர்பான வகுப்புகளை நடத்த வேண்டும். உயர்நிலைப் பள்ளிக்கு ஒரு ஆசிரியர் மற்றும் மேல்நிலைப் பள்ளிக்கு இரண்டு ஆசிரியர் வீதம் நியமிக்கப்பட உள்ளனர். ஜனவரி மாதத்தில், 'அனிமேஷன்' வகுப்புகள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக