சேலம் : குள்ளப்பநாயக்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியரை நியமிக்ககோரி, கலெக்டரிடம் மனு வழங்கப்பட்டது.
சேலம் மாவட்ட தி.மு.க., மாணவர் அணி அமைப்பாளர் தமிழரசன், கலெக்டர் மகரபூஷணத்திடம் வழங்கிய மனு விவரம்:சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில், குள்ளப்பநாயக்கனூர், அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த கல்வியாண்டின் தொடக்கத்தில் இருந்தே, ப்ளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்துக்கு தனியாக ஆசிரியர் பணியமர்த்தவில்லை. இதனால், மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சில மாதங்கள் மட்டும் மாற்று ஆசிரியர்கள் பாடம் நடத்தி வந்தனர்.கடந்த மூன்று மாதமாக, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை நடத்த எந்த ஆசிரியரும் பணியமர்த்தவில்லை. ப்ளஸ் 2 மாணவர்கள், பொது தேர்வை சந்திப்பது கேள்விக்குறியாகிவிட்டது. பொது தேர்வுக்கு இரண்டு மாதம் மட்டுமே உள்ள நிலையில், மாணவர்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு, உடனடியாக அந்த பாடத்துக்கு பகுதி நேர ஆசிரியர் நியமிக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக