சேலம், First Published : 28 December 2014 03:22 AM IST
பகுதிநேர ஆசிரியர்கள் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி, சேலத்தில் நடைபெற்ற தமிழக சிறப்பாசிரியர்கள் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலர்கள் கூட்டம் அதன் தலைவர் சோலை எம்.ராஜா தலைமையில் சேலத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் அந்தச் சங்கத்தின் சேலம் மாவட்டத் தலைவர் கே.பெரியசாமி, மாவட்டச் செயலர் எம்.நரசிம்மன், மாநிலத் தலைவர் ஜெயசந்திரபூபதி, நிர்வாகிகள் ராஜாதேவ் காந்த், ஜான்சன், சேசுராஜா, ஆனந்த்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.2 ஆயிரம் சம்பள உயர்வு அறிவித்த தமிழக முதல்வர், பள்ளிக் கல்வி அமைச்சர், பள்ளிக் கல்வி செயலர், இயக்குநருக்கு நன்றித் தெரிவிக்கப்பட்டது.
சிறப்பாசிரியர்களுக்கு தேர்வு நடத்துவதற்கு தடை விதித்து முன்பு இருந்ததைப் போல வேலைவாய்ப்பு அலுவலக மூப்பின்படி பணி அமர்த்த வேண்டும். பகுதி நேர ஆசிரியர்கள் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக