மத்திய அரசு வழங்கும் ஊதியத்திற்கு இணையான ஊதியத்தைதமிழக ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்று கமுதி வட்டாரஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம்நடைபெற்றதில் கோரிக்கை வலியுறுத்தப்ப ட்டுள்ளது.
கமுதி வட்டார ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணிபொதுக்குழு கூட்டம், வட்டார தலைவர் டி.ஞான செல்வம் தலைமையி்ல் நடைபெற்றது. செயலர் ஆ.ராமர் வரவேற்று, சங்க பணிகள்மற்றும் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தில்மாவட்ட செயலர் எஸ்.முத்து முருகன், துணைத்தலைவர்ஆர்.அரிகிருஷ்ணன், வட்டார முன்னாள் பொரு ளாளர் டி.குலசேகரபாண்டியன் உள்பட பலரும் பேசினர்.
தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு கணக்குச்சீட்டுகள் வழங்குதல், ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர்களைஇணைய தளத்தில் இ.எம்.ஐ.எஸ். விவரங்களை ஏற் றவலியுறுத்துவதை கைவிட்டு, வட்டார உதவி தொடக்க கல்விஅதிகாரிகளையை இணைய தளத்தில் ஏற்றச்செய்தல் உள்பட பலதீர்மானங்கள் நிறைவேறறப்பட்டன. பொருளாளர் ஐ.சித்ரா நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக