நாகை மாவட்டம், சீர்காழியில் அமைந்துள்ள வாணி விகாஸ் பள்ளியில்
பகுதிநேர சிறப்பாசிரியர்களின் கூட்டம் இன்று நடந்தது.
இக்கூட்டத்தில் பகுதிநேர சிறப்பாசிரியர் சங்க மாநிலப் பொருளர்
ஜான்சன், ஒன்றியத்தலைவர்கள் மாரியப்பன், ஜெகன் சைனா, அருகமை
ஒன்றியப் பொறுப்பாளர்கள் ஸ்டாலின், ராம் கணேஷ் குமார்,
அருண்,அனீஸ் உள்ளிட்ட 70 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள்
கலந்துக்கொண்டு, ஊதிய உயர்வு காலத்தாமதம்,
நிலுவைத் தொகையாக இவ்வுயர்வு ஏப்ரல்
2014 முதல் கிடைக்குமா?, பணியிடமாறுதல் மற்றும் பணிநிரந்தரம் ஆகுமா?
என்பன போன்ற கோரிக்கைகள் குறித்து
விவாதித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக