தமிழக அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, இசை, யோகா,ஓவியம், தையல் மற்றும் கணினி போன்ற சிறப்புப்பாடங்களை சிறப்பாசிரியர்கள் கையாள்கின்றனர். இவ்வாசிரியர்கள் ஏற்கனவே முழுநேரமாக பணியாற்றி வந்தனர்.
பின்னர் மார்ச் 2012 ல், அரசாணை எண் 177 நாள் 11.11.2011 ன் படி சிறப்பாசிரியர்கள் பகுதிநேர பயிற்றுநர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு மாதச்சம்பளம், நாட்கள் அடிப்படையில் 12 அரை நாட்கள் என நிர்ணயிக்கப்பட்டு, தொகுப்பூதியமாக 5000 வழங்கப்பட்டது.
மூன்று அரைநாட்கள், அதாவது ஒரு வேளை மட்டும் காலை அல்லது மாலை என வார நாட்களில் மூன்று நாட்கள் சிறப்புப்பாடங்களுக்கென கால அட்டவணை தயாரிக்கப்பட்டு, வழங்கப்பட வேண்டும்.
ஒரு வேளை, வேலைக்கு ஒரு நாள், வரவில்லை என்றால் கூட, தற்செயல் விடுப்பின்றி, ஊதியம் பிடித்தம் செய்யப்படும் தினக்கூலிகளாக பணியாற்றவேண்டியுள்ளது.
வேறு எந்த விடுப்பும், பணப்பலனும் கிடையாது. கன மழை, தேர்வு விடுமுறை போன்ற சூழலில் ஊதியம் பிடித்தம் செய்யப்படுகிறது.
16,549 பயிற்றுநர் பணியிடங்களில் பகுதிநேர பயிற்றுநர்கள் தற்காலிக பயிற்றுநர்களாக 15169 பேர், பல இன்னல்களுக்கிடையே பணியாற்றி வருகின்றனர்.
விலைவாசி உயர்வு, மகப்பேறு விடுப்பின்மை, தொலை தூரப்பயணம், வருமானம் போதாத நிலை ஆகிய பிரச்சனைகளில் பகுதிநேர பயிற்றுநர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.
இச்சிக்கலில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சென்ற ஆண்டு பணியைத் துறந்தனர். இந்நிலை மிகவும் கவலைக்குரியதாகும். இதனை பயன்படுத்தி, பல தொழிலாளர் விரோதப் போக்கும் நிகழ்கின்றது.
இந்நிலையில் வெளியான 1028 முழுநேர சிறப்பாசிரியர்கள் தேர்விற்கான, அரசாணை எண் 185, நாள்17.11.2014, சிறப்பாசிரியர்களை முழுநேர சிறப்பாசிரியர்களாக நியமிக்க வழிகாட்டுகிறது.
இவ்வாணை, பகுதிநேர ஆசிரியர்களின், மூன்றாண்டு அனுபவத்தையும், தொடர்ந்து பெற்று வந்த குறை ஊதியத்தையும் கருத்தில் கொள்ளாமல் வெளிவந்துள்ளது, வருந்தத்தக்கதாகும். மேலும் ஒரு சில பள்ளிகளில் முழுநேர முழு ஊதிய ஆசிரியர்களும், பல பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களும் சிறப்பாசிரியர்களாக பணியாற்றும் நிலை ஏற்படுகிறது.
இதனால் பகுதிநேர ஆசிரியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக