பிச்சை எடுக்குதாம் பெருமாளு அதை புடுங்குதான் அனுமாரு.....
– புவி அரசு
தமிழக அரசுப் பள்ளிகளில் 15169 பகுதிநேர ஆசிரியர்கள், அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் வாயிலாக பணியமர்த்தப்பட்டு, கடந்த மூன்றாண்டுகளாகப் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு ஊதியம் மின்ணணு பட்டுவாடா முறையில், அனைவருக்கும் கல்வி இயக்க நிதியிலிருந்து தொகுப்பூதியமாக மாதா மாதம் தினக்கூலி முறையில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்ற அக்டோபர் 2014 மாதத்தில் தீபாவளி,கன மழை போன்ற காரணங்களால் பள்ளி வேலை நாட்கள் குறைத்த காரணத்தால் கொடுக்கும் 5000 ரூபாய் ஊதியத்தில் பிடித்தம் செய்துள்ளனர்.
அனைவருக்கும் கல்வி இயக்கம் மழை, அரசு விடுமுறை போன்ற காரணங்களால் வருகை நாட்கள் பத்து நாட்கள் இருந்தால் போதுமானது எனவும், மீதி உள்ள இரண்டு நாட்கள் வேலை நாட்களாக எடுத்துகொள்ளப்படும் என 5/11/2014 நடை பெற்ற சீர்காழி ப்ளாக் பகுதி நேர ஆசிரியர்களிடம் கூறிவிட்டு சீர்காழி ப்ளாக்கை சேர்ந்த நான்கு ஆசிரியர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்துள்ளனர்.
கொடுக்கும் 5000 ஊதியத்தில் பிடித்தம் செய்தால் நாங்கள் தற்போது உள்ள சுழலில் எவ்வாறு வாழ்கையே நடத்துவது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக