பள்ளி ஆசிரியர்களுக்கான பணிப் பாதுகாப்பு சட்டத்தைஏற்படுத்த வேண்டும்,' என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்வலியுறுத்தியது. மதுரையில் இதன் பொதுக் குழுக் கூட்டம் மாநிலதலைவர் இளங்கோவன் தலைமையில் நடந்தது.
மாநில அமைப்பு செயலாளர் நாகசுப்பிரமணியன் முன்னிலைவகித்தார். மாவட்ட செயலாளர் முருகன் வரவேற்றார்.
ஆசிரியர்கள்மீது அடிக்கடி தாக்குதல் சம்பவங்கள் நடக்கின்றன. அவர்களுக்குபணிப்பாதுகாப்பு சட்டத்தை அரசு ஏற்படுத்த வேண்டும். சென்னையில்ஆசிரியரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டன.
உயர்நிலை மேல்நிலைபள்ளி தலைமையாசிரியர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கூறுகையில் ''சென்னையில் ஆசிரியர் தாக்குதலுக்குள்ளானது கண்டிக்கத்தக்கது,'' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக