நேற்று ( 02 - 11 - 2014 ) தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க கூட்டம் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நடைபெற்றது.
சங்க கூட்டத்திற்கு திரு. S.அர்ச்சுனன் தலைமை வகித்தார். மாநில செய்தித் தொடர்பாளர் திரு. பொன். சங்கர் முன்னிலை வகித்தார். திரு. V. செந்தில் குமார் கூட்டத்தை வழிநடத்தினார்.
கூட்டத்தின் சிறப்பு விருந்தினர்களாக மாநில அமைப்பாளர் திரு.கு.சேசுராஜா, மாநில பொருளாளர் திரு. M.K. ஜான்சன் மற்றும் ஈரோடு இளமதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் ஊதிய உயர்வு, பணிநிரந்தரம் மற்றும் பணியிட மாறுதல் ஆகிய கோரிக்கைகளை முன்னிருத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.
இறுதியாக திரு.ஜெகன் மற்றும் யுவராஜ் நன்றி கூறினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக