அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு இந்த மாதம் முதல் 'வலைதளசம்பளப் பட்டியல்' (வெப் பே-ரோல்) முறையில் சம்பளம் வழங்கஉத்தரவிடப்பட்டுள்ளது. ''ஊழியர்களுக்கு முறையான பயிற்சிமற்றும் 'பாஸ்வேர்டு' வழங்காத நிலையில் சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது,'' என அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர்கண்ணன் தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு அந்தந்த அலுவலகங்களில் சம்பளப்பட்டியல் தயாரிக்கப்பட்டு, கருவூலம் மூலம் சம்பளம்வழங்கப்படுகிறது. தற்போது இந்த நடைமுறை எளிதாக்கப்படஉள்ளது. 'வலைதள சம்பளப் பட்டியல்' (வெப் பே-ரோல்) முறையில்அந்தந்த அலுவலகங்களில் இருந்து நேரடியாக வங்கிக்கே பட்டியல்அனுப்பப்படும். தற்போது இதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்துஅரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் கண்ணன் கூறியதாவது: அரசுஊழியர், ஆசிரியர்களுக்கு 'வெப் பே-ரோல்' முறையில் சம்பளம்வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறையில் வருவாய்,ஊரக வளர்ச்சி, வேளாண் துறை அலுவலர்களுக்கு சோதனைஅடிப்படையில் கடந்த மாதம் சம்பளம் வழங்கப்பட்டது. ஒவ்வொருதுறை அலுவலகத்திலும் ஊழியர் ஒருவருக்கு இந்த நடைமுறைகுறித்து பயிற்சி அளிக்க வேண்டும். 'கடமைக்காக' கூட்டம் போட்டுஇது தான் 'வெப் பே-ரோல்' என வாய்மொழியாக கூறிவிட்டனர்;கம்ப்யூட்டரில் பயிற்சி அளிக்கவில்லை.
இதனால் உழியர்கள் தடுமாறுகின்றனர். துறை அலுவலர்களின் பணிமூப்பு விபரங்களை பதிவு செய்யவே நாட்கள் குறைவாக உள்ளது; இந்நிலையில், இம்மாதம் அனைத்து ஊழியர்களுக்கும் இந்த முறையிலே சம்பளம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பலஉதவியாளர்களுக்கு இதற்கான 'யூசர் நேம், பாஸ்வேர்டு'ஆகியவற்றை கருவூலத்துறையினர் கொடுக்கவில்லை. இதனால்அக்டோபர் மாத சம்பளம் வழங்குவதில் சிக்கல் உள்ளது. இவ்வாறுகூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக