விழுப்புரம்: தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுக் குழு கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் வேலாயுதம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் இளங்கோவன், வெண்ணிலா முன்னிலை வகித்தனர். மண்டல ஒருங்கிணைப்பாளர் நமச்சிவாயம் வரவேற்றார். மாநில தலைவர் ராமர், இணை செயலாளர் விஜயகுமார் மற்றும் மாநில பிரசார செயலாளர் ஆறுமுகம் பேசினர். முன்னாள் முதல்வர் ஜெ.,விற்கு வழங்கிய கோர்ட் தீர்ப்பைக் கண்டித்தும், உடனடியாக ஜாமீன் வழங்காததைக் கண்டித்தும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. நிர்வாகி கலைச்செல்வி நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக