காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை மூலம், 652 தொழிற்கல்வி பயிற்றுனர் காலிப் பணியிடத்திற்கு, மாநில அளவில் பரிந்துரை செய்வதற்காக, உத்தேச பதிவுமூப்பு பட்டியல் தயார் செய்யப்பட உள்ளது.
இப்பணியிடத்திற்கு பி.எட்., கல்வித்தகுதியுடன் பி.எஸ்சி., கணினி அறிவியல் அல்லது பி.எட்., கல்வித் தகுதியுடன் பி.சி.ஏ., அல்லது பி.எட்., கல்வித்தகுதியுடன், பி.எஸ்.சி., தகவல் தொழில்நுட்பம் ஆகிய கல்வித் தகுதிகளில் ஏதேனும் ஒன்றை, காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், பதிவு செய்திருக்க வேண்டும்.
கல்வித்தகுதியுடன் பதிவு செய்துள்ளவர்கள், தங்களது பெயர், பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம். பதிவுதாரர்கள், தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்கள் மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் (ஆன்-லைன் கார்டு) இன்றைக்குள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து சரிபார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக