முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

செவ்வாய், 7 அக்டோபர், 2014

புதிய கல்விக் கொள்கைக்கு மக்களிடம் ஆலோசனை கேட்கப்படும்: ஸ்மிருதி இரானி

தேசிய அளவிலான புதிய கல்விக் கொள்கையைஉருவாக்குவதற்காக மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரிடம்மத்திய அரசு ஆலோசனை கேட்கும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

இது குறித்து அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில்திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் அவர் பேசியதாவது: புதிய கல்விக்கொள்கையை உருவாக்குவதற்காக நாங்கள் அனைத்து மாநிலங்களுக்கும்செல்லத் திட்டமிட்டுள்ளோம்.

இந்தக் கொள்கையை உருவாக்குவதற்காக மாணவர்கள்,ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரிடம் இருந்து உரிய ஆலோசனைகள்பெறப்படும். மேலும் இந்தக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும்அவர்களிடம் விரிவாக ஆலோசனை நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

புதிய கல்விக் கொள்கை அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படும்என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக