தற்பொழுது பின்பற்றப்படும்,பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் வழங்கல் முறை, அனைவருக்கும் கல்வி இயக்க பணியாளர்கள் முதல் ஊதியம் பெறும் ஆசிரியர்கள் வரை பல்வேறு சிக்கல்களை சந்திக்கும் விதமாக உள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் அவர்களின் கடிதம் ( Rc.No.643 / A15 / PTI / 2013, dated: 04.09.2013 ) பல செயல்முறைச் சிக்கல்களுக்கிடையே 5 ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க இயலா நிலையில், ஏட்டளவில் மட்டுமே உள்ளது.
அதாவது , பள்ளித் தலைமையாசிரியர்கள், ஒவ்வொரு மாதமும் பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் பெற, ஒன்றிய வளமையத்திற்கு வருகைப்பதிவு நகல் மற்றும் வருகை புரிந்த விவரம் ஆகியனவற்றை அனுப்பி, பின்னர் மாவட்ட அனைவருக்கும் கல்வி அலுவலகத்தில் பரிசீலிக்கப்பட, பல ஆவணங்கள் மற்றும் கோப்புகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்புவது சுமார் 5 நாட்களுக்கு மேலான கடினமான பணியாக உள்ளது.
இப்பணியை எளிதாக்கும் பொருட்டு அனைத்து ஆசிரியர்களையும் போன்று சமமாக பகுதிநேர ஆசிரியர்களையும் பாவித்து, வரும் மாதத்திலிருந்து E-Payroll என்ற இணைய-சம்பள முறைக்கு உட்படுத்தி, நிதி கணக்கினை எளிதாக கையாள்வதுடன், பகுதிநேர ஆசிரியர்களும் எளிதில் அனைவரையும் போன்று மாத இறுதிப் பணி நாளில் ஊதியம் பெற்று மகிழச் செய்ய பணிவுடன் வேண்டுகிறோம்.
இவண்
சோ.முத்துராமன், செய்தித்தொடர்பாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக