சூரியன், பூமி, நிலவு ஆகியவை நேர்கோட்டில் வரும் நிகழ்வு சந்திர கிரகணம். இந்த நிகழ்வின்போது பூமியின் நிழல் சந்திரன் மீது படுவதே சந்திர கிரகணம் எனப்படுகிறது. எனினும், தமிழகத்தில் இந்த கிரகணத்தைப் பார்ப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் பி.அய்யம் பெருமாள் கூறினார்.
இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அதைப் பார்க்க முடியாது. கிரகணம் நடைபெறும்போது இரவு நேரமாக உள்ள அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியாவின் ஒரு சில பகுதிகளில் இதைக் காணலாம்.
சிவப்பு நிலா ஏன்? வளிமண்டலத்தில் உள்ள வாயுக்கள் காரணமாக பூமியின் நிழல் செம்பழுப்பு நிறத்தில் இருக்கும் என்பதால், பெரும்பாலும் சந்திர கிரகணத்தின்போது சந்திரன் சிவப்பு நிறத்தில் இருக்கும் என வானியல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
- தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக