கிராமப்புறங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காக “டிரஸ்ட்” தேர்வு எனப்படும் ஊரக திறனாய்வுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு பிளஸ்-2 வரை ஆண்டுக்கு ரூ.1,000 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
ஒரு மாவட்டத்துக்கு 100 பேர் (50 மாணவர்கள், 50 மாணவிகள்) வீதம் தமிழகம் முழுவதும் சென்னை நீங்கலாக 31 மாவட்டங்களில் இருந்து மொத்தம் 3,100 பேர் தேர்வுசெய்யப்படுகிறார் கள்.
இந்த ஆண்டுக்கான டிரஸ்ட் தேர்வு கடந்த செப்டம்பர் 28-ம் தேதி அன்று நடைபெறுவதாக இருந்தது. நிர்வாக காரணங்களால் இத்தேர்வு அக்டோபர் 12-ம் தேதிக்கு (ஞாயிற்றுக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி, டிரஸ்ட் தேர்வு வருகிற ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் 176 மையங்களில் நடைபெறுகிறது. இத்தேர்வில் 57 ஆயிரம் மாணவ-மாணவிகள் கலந்துகொள் வதாக அரசு தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக