முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

புதன், 10 செப்டம்பர், 2014

காலிப் பணியிடங்களை நிரப்ப உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கம், முதல்வருக்கு கோரிக்கை

'காலியாக உள்ள பணியிடங்களை, அரசாணைப்படி, நிரப்ப வேண்டும்' என,அரசு வேலையில்லா உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கம், முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

முதல்வர் அலுவலகத் தில் கொடுத்த, மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2012ல், 451 உடற்கல்வி ஆசிரியர்கள் உட்பட, 753 பணியிடங்களை நிரப்ப, அரசு அனுமதி அளித்தது. அதன்படி, காலிப் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வுக்கான பணிகளும் துவக்கப்பட்டன. தகுதி வாய்ந்த நபர்களின், சான்றிதழ் சரிபார்ப்பு பணியும் நடந்தது. அதன்பின் அப்பணி நிறுத்தப்பட்டு விட்டது.

அடுத்து, 2013ல்,116 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசு ஏற்கனவே வெளியிட்ட அரசாணையின்படி, உடனடியாக மாநில பதிவு மூப்பு பட்டியல் வெளியிட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, பணி நியமனம் வழங்க, முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக