முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 8 செப்டம்பர், 2014

நீதிபோதனை ஆசிரியர்களை நியமிக்காததால் மாணவர்களிடையே பெருகும் வன்முறை கலாசாரம்

பள்ளிகளில் நீதிபோதனை ஆசிரியர்களை நியமிக்காததால், மாணவர்களிடையே வன்முறை கலாசாரம் பெருகி வருகிறது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மாணவர்களிடையே வன்முறை கலாசாரம் 
அதிகரித்து வருகிறது.

இரு ஆண்டுகளுக்கு முன், சென்னையில், வகுப்பு ஆசிரியை, மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் நடந்தது. கடந்த ஆண்டு திருநெல்வேலியில், கல்லூரி முதல்வர் கத்தியால் குத்தப்பட்டு இறந்தார். இதில் சில மாணவர்கள் கைதாகினர். பள்ளி மாணவர்களிடையே, ஜாதிய வேறுபாடுகள் அதிகரித்து வருகிறது.

இதில் ஏற்படும் சண்டை, ராஜபாளையத்தில் ஜாதிய போஸ்டர் அடித்து ஒட்டும் அளவிற்கு சென்றுள்ளது. தற்போது மாணவர்கள், மதிப்பெண் வாங்கும் இயந்திரமாகவே பார்க்கப்படுகின்றனர். அவர்கள் ரிலாக்ஸ் ஆவதற்கு, தையல், ஓவியம், பாட்டு, நீதிபோதனை வகுப்புகள் இருந்தன. தற்போது ஓவியம் மட்டுமே உள்ளது. பெரும்பாலான பள்ளிகளில், மற்ற பாடங்களுக்கு ஓய்வு கொடுத்து விட்டனர்.

நீதிபோதனை வகுப்புகளில், நீதி கதைகளை சொல்லி, நன்மை மற்றும் தீமைகளை மாணவர்களுக்கு ஆசிரியர் புரிய வைப்பார். தற்போது நீதிபோதனை வகுப்புகளும் இல்லை, அதற்கான ஆசிரியர்களும் நியமனம் இல்லை. இந்நிலை நீடிப்பதால், மாணவர்களிடையே வன்முறை பெருகிவருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக