முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 29 செப்டம்பர், 2014

புதிய முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் கண்ணீர் மல்க பதவியேற்பு : அமைச்சர்களும் பதவியேற்பு

தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் ஆளுநர் மாளிகையில் இன்று கண்ணீர் மல்க‌ பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னையில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகையில், ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்கும் விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பதவியேற்பு விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சிப் பிரமுகர்கள், சட்டப்பேரவைத் தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பன்னீர்செல்வத்தைத் தொடர்ந்து அவரது அமைச்சரவையில் அமைச்சர்களாக சிலர் பதவியேற்றுக் கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து நத்தம் விஸ்வநாதன், மோகன், கிருஷ்ணமூர்த்தி, வேலுமணி, சின்னையா, கோகுல இந்திரா, சுந்தர்ராஜ், எடப்பாடி பழனிச்சாமி, வளர்மதி, பழனியப்பன், செல்லூர் ராஜு, காமராஜ், தங்கமணி, செந்தூர் பாண்டியன், சண்முகநாதன், சுப்பிரமணியன், ஜெயபால், செந்தில் பாலாஜி, சம்பத், உதயகுமார், முக்கூர் என்.சுப்ரமணியன், ராஜேந்திர பாலாஜி, பி.வி.ரமணா, கே.சி.வீரமணி, எம்.எஸ்.எம். ஆனந்தன், தோப்பு வெங்கடாசலம், பூனாட்சி, அப்துல் ரஹீம் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்களும் அமைச்சர்களாக கண்ணீர் மல்க‌ பதவியேற்றனர். 

அ.தி.மு.க.வில் ஆரம்ப கால உறுப்பினரான‌ ஓ.பன்னீர்செல்வம் 

அ.தி.மு.க.வில் ஆரம்ப காலம் முதலே உறுப்பினராக இருந்து வரும் ஒ. பன்னீர்செல்வம், கட்சியின் பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார். அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு, அக்கட்சியில் பிளவு ஏற்பட்டு இரண்டாகப் பிரிந்தது. அப்போது ஜானகி அணியில் ஒ.பன்னீர்செல்வம் இணைந்து செயலாற்றி உள்ளார்.

பெரியகுளம் நகர்மன்றத் தலைவராகவும் ஆரம்பக் காலத்தில் பதவி வகித்துள்ளார். தேனி மாவட்ட அதிமுக செயலாளராகவும் இருந்துள்ளார். பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இவர், 2001 முதல் 2006ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் தமிழக வருவாய்த்துறை அமைச்சராக பதவி வகித்தார். டான்சி முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த காரணத்தால், தமிழக முதலமைச்சர் பதவியில் இருந்து ஜெயலலிதா விலக நேரிட்டது. இதையடுத்து, ஓ. பன்னீர் செல்வம் முதலமைச்சராக 2001-ம் ஆண்டு செப்டம்பரில் பதவியேற்றார்.

இந்நிலையில், தற்போது, சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், முதலமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டிய சூழல் உருவானது. இதையடுத்து, 2-வது முறையாக, ஓ.பன்னீர் செல்வம், தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக