முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

புதன், 24 செப்டம்பர், 2014

உத்தேச மின் கட்டண உயர்வு விவரம்

உத்தேச மின் கட்டண உயர்வு விவரம் (யுனிட் ஒன்றுக்கு இரண்டு மாத பயன்பாட்டுக்கான கட்டணம்):

தாழ்வழுத்த மின்சாரத்தை பயன்படுத்தும் வீடுகள், கோயில்கள், குறுநிறுவனங்களுக்கான கட்டண உயர்வு விவரம்:

வீடுகளுக்கு யூனிட் உத்தேச உயர்வுக் கட்டணம் (தற்போதையக்கட்டணம்): 0-100 வரையில் ஒரு யூனிட்டுக்கு ரூ. 3 (ரூ.2.60); 0-200 ரூ. 3.25 (ரூ. 2.80); , 201-500 யூனிட்டுகளில் 0 முதல் 200 வரை தனியாகவும், 201 முதல் 500

வரை தனியாகவும் கணக்கிட்டு வசூலிக்கப்படும்.

0-200 ரூ. 3.50 (ரூ.3); 201-500 ரூ. 4.60 (ரூ. 4); , 501 யூனிட்டுக்கு மேல் 0-200, 201-500, 501-க்கு மேல் என்ற அடிப்படையில் தனித்தனியாககணக்கிடப்படும். 0-200 ரூ.3.50 (ரூ.30); 201-500 ரூ. 4.60 (ரூ. 4); 501-க்குமேல் ரூ. 6.60 (ரூ.5.75).

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள்- ஒரு யூனிட் ரூ.5.75 (ரூ. 5). தனியார் கல்வி நிறுவனங்கள் ஒரு யூனிட் ரூ. 7.50 (ரூ. 6.50).கோயில்கள் வழிபாட்டுத் தலங்கள்-ஒரு யூனிட் ரூ. 5.75 (ரூ. 5 ).

காட்டேஜ்கள், குறு நிறுவனங்கள்: 2 மாதங்களுக்கு 500 யூனிட்டுகள்வரை ஒரு யூனிட் ரூ. 4 (ரூ. 3.50); 500 யூனிட்டுகளுக்கு மேல் ஒருயூனிட் ரூ. 4.60 (ரூ. 4). விசைத்தறி நிறுவனங்கள்- 2 மாதங்களுக்கு 0-500 யூனிட்டுகள் வரை ஒரு யூனிட் ரூ. 5.20 (ரூ. 4); 501-1000 யூனிட்டுகள்வரை ஒரு யூனிட் ரூ. 5.75 (ரூ. 5).

தொழில் நிறுவனங்கள்- ஒரு யூனிட் ரூ. 7.22 (ரூ. 5.50).

வர்த்தக ரீதியிலான மின் பயன்பாடு-2 மாதங்களுக்கு 100 யூனிட்வரை ஒரு யூனிட் ரூ. 4.95 (ரூ. 4.30); 100 யூனிட்டுகளுக்கு மேல் ஒருயூனிட் ரூ. 8.05 (ரூ. 7).

கட்டுமானம் போன்ற தாற்காலிக மின் இணைப்புகள்: ஒரு யூனிட் ரூ. 12.10 (ரூ. 10.50).

குடிசை வீடுகள், விவசாய பயன்பாட்டுக்கான மின் கட்டணங்களும்உயர்த்தப்பட்டுள்ள போதிலும், அவற்றுக்கான மின் பயன்பாட்டுகட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக்கொண்டு, மானியமாக மின்வாரியத்துக்கு அளித்துவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் அழுத்த பயன்பாட்டு உத்தேச உயர்வுக் கட்டணம்(தற்போதையக் கட்டணம்): தொழில் நிறுவனங்கள்: ரூ. 7.22 (ரூ. 5.50);ரயில்வே- ரூ. 7.22 (ரூ. 5.50); அரசு, அரசு உதவி பெறும் கல்விநிறுவனங்கள்- ரூ. 7.22 (ரூ. 4.50); தனியார் கல்வி நிறுவனங்கள் ரூ. 7.22 (ரூ. 5.50); வர்த்தக பயன்பாடு- ரூ. 8.05 (ரூ. 7); தாற்காலிகபயன்பாடு ரூ.11 (ரூ. 9).

மின் வாரியத்துக்கு ரூ. 6,854 கோடி இழப்பு

தமிழ்நாடு மின் வாரியத்துக்கு 2014-15 ஆம் ஆண்டுக்கான வருவாய்தேவை ரூ. 39,818 கோடியாகும்.

ஆனால், மின் வாரியத்தின் வருவாய் ரூ. 32,964 கோடி அளவிலேயேஉள்ளது. இதனால் ரூ. 6,854 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள உத்தேச உயர்வுக் கட்டணம் மூலம்,மின் வாரியத்துக்கு ரூ. 6,805 கோடி அளவுக்கு கூடுதல் வருவாய்கிடைக்கும்.

எனினும், மின் வாரியத்துக்கு நிகழாண்டில் ரூ. 49 கோடி வருவாய்இழப்பு ஏற்படும் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம்தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக