முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம்; அதிகரிக்க வலியுறுத்தல்?

தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியத்தை 10ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும்' என அரசுக்கு, தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச்சங்க மாநில தலைவர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: 

ஓவியம், தையல், இசை, உடற்கல்வி என ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வாணையம் கடந்த, 2013, மே மாதம் 782 பணியிடங்கள் தேர்ந்தெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான நேர்முகத் தேர்வுக்கு ஒரு பணியிடத்துக்கு 5 பேர் வீதம் 3110 பேர் அழைக்கப்பட்டனர். ஆனால், இப்பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படவில்லை. 

ஏற்னவே தேர்ந்தெடுக்கப்பட்ட 10ஆயிரத்து 548 ஆசிரியர் பணியிடங்களுக்கு தொகுப்பூதியமாக 5 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இத்துடன் கூடுதலாக இரண்டாயிரம் ரூபாய் சேர்த்து 7 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 

2012ம் ஆண்டு முதல் பணியாற்றும் இத்தகைய பகுதி நேர ஆசிரியர்களுக்கு தொகுப்பு ஊதியமாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்; பணி நிரந்தரம் செய்து தர வேண்டும் இவ்வாறு, அவர் அறிக்கையில் தெரிவித்தார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக