முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

வியாழன், 14 ஆகஸ்ட், 2014

பகுதிநேர சிறப்பாசிரியர்களின் வேண்டுகோள்

அனைவருக்கும் கல்வித்திட்டதின் கீழ் அரசாணை 177 நாள் 11.11.2011 ன் படி தமிழகம் முழுவதும் 16549 ஆசிரியர்கள் அரசு நடுநிலை, உயர் நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் நியமிக்கப்பட்டனர். 

இப்பணியிடங்களில் 5253 கலையாசிரியர்களும், 5392 உடற்கல்வி ஆசிரியர்களும், தொழிற்கல்வி ஆசிரியர்கள் (கணினி உட்பட) 5904 ஆசிரியர்களும் ஆறாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பகுதிநேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். 

இவர்களில் 15169 ஆசிரியர்கள் பணியாற்றுவதாக அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

மீதி 1380 பணியிடங்கள் காலியானதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த இரண்டாண்டுகளில் 8.33% பணியிடங்கள் காலியேற்ப்பட்டதற்கு பணிச்சூழல் சரியில்லாதது முக்கிய காரணமாக இருக்கலாம். 

மேலும் இவ்வாசிரியர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியம் ரூபாய் 5000 போதுமானதாக இருக்கவில்லை. பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியத்தை ரூபாய் 7000 ஆக உயர்த்தி அறிவிப்பு வந்துள்ளது சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது. ஆனால் உயர்த்தப்பட்ட ஊதியம் எப்பொழுது கிடைக்கும் என பகுதிநேர ஆசிரியர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.

கடந்த மூன்றாண்டுகளில் மே மாதம் ஊதியமும் வழங்கப்படவில்லை. 

ஊதிய உயர்வு நிலுவைத்தொகை, ஏப்ரல் 2014, ஜூன் 2014, ஜூலை 2014 மற்றும் ஆகஸ்டு 2014 மாதங்களுக்கு வழங்கப்பட ஆணை வழங்கப்படவில்லை.

இதனிடையே தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் அனைத்து மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய ஓ.மு.எண் 023981/ஜே3/2013 நாள் 12.8.2014 ல் பணியிட தேவை விவரம் கோரப்பட்டுள்ளது.

பகுதி நேரம் போக, மீதி நேரத்தில் வேறு வேலைகள் கிடைப்பது அரிதாக உள்ள நிலையில், ஒரு ஆசிரியருக்கு இரு பள்ளிகள் வழங்கினால் சற்று பொருளாதாரச் சுமையை சமாளிக்க ஏதுவாகும். எனவே அரசாணை எண் 177 நாள் 11.11.2011 ல் ‘’utilization of the services of selected incumbents in schools as part time instructor’’ என்ற 3 ஆம் தலைப்பில் ‘’The Services of the selected part time instructors may be utilized for maximum nearby 4 schools “ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை சற்று பரிசீலனைச்செய்து பகுதிநேர ஆசிரியர்களுக்கு இரு பள்ளிகளாவது வழங்கி சற்று ஆறுதல் அளிக்க வேண்டுகிறோம்.

சோ.முத்துராமன், மாநில செய்தித்தொடர்பாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக