தஞ்சை : அரசு பள்ளிகளில் வேலைவாய்ப்பு வழங்க கோரி பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகள் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரசு பள்ளிகளில் படிக்கும் 11, 12ம் வகுப்பு கணிப்பொறி பாடப்பிரிவுகளுக்கு பி.எட். கணினி அறிவியல் படித்த பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். 6 முதல் 10ம் வகுப்பு வரை கணினி பாடங்களை நடைமுறைப்படுத்தி அதற்கான கணினி ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும். 2014 ஜனவரி 31ம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளிலும் கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டும் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் பாதிக்கப்பட்டுள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பி.எட். கணினி அறிவியல் பட்டதாரிகளுக்கு அரசு பள்ளிகளில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎட் கணினி அறிவியல் பட்டதாரிகள் தஞ்சை கலெக்டர் அலுவலகம் (பனகல் கட்டடம்) நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பி.எட் கணிப்பொறி அறிவியல் பட்டதாரிகள் சங்க தலைவர் ராஜேஷ்குமார் தலைமை வகித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக