அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ், கடந்த 2011-ம் ஆண்டு பள்ளிகளில், ஓவியம், தையல், உடற்பயிற்சி பிரிவுகளுக்கு, பகுதி நேர அடிப்படையில் ஆசிரியர்கள், மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளத்தில் நியமிக்கப்பட்டனர்.
இவர்களுக்கான சம்பளம், எஸ்.எஸ்.ஏ., மூலம், தலைமை ஆசிரியர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு, கிராம கல்விக்குழு மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில், பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.2 ஆயிரம் சம்பள உயர்வு அறிவிப்பு, தமிழக அரசால் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், தற்போது அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் விபரங்களையும், பகுதி நேர ஆசிரியர்கள் தேவைப்படும் பட்சத்தில் காலியிடம் இருப்பின் அது குறித்த விபரங்களையும், அனுப்பி வைக்க தொடக்க கல்வி இயக்குனரகம், மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் இது தொடர்பான விபரங்களை சேகரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக