முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

செவ்வாய், 15 ஜூலை, 2014

பகுதிநேர ஆசிரியர்கள் குறித்த கோரிக்கை - சட்டமன்றத்தில் விவாதமாகுமா? - திரு. பொன்சங்கர் அவர்களின் கட்டுரை

Monday, July 14, 2014

சட்டமன்ற கல்விமானிய கோரிக்கையில் நிலைவிளக்கம் குறித்து கேள்வி எழுப்ப மதிப்பிற்குரிய சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் அவர்களுக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கைகள் அடங்கிய விண்ணப்பத்தினை அளித்தனர்.

வரும் ஜூலை 17ஆம் தேதி சட்டமன்றத்தில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி துறைகள் மீதான கல்விமானிய கோரிக்கை நடைபெற உள்ளது.

சென்ற ஆண்டு சட்டமன்றத்தில் கல்விமானிய கோரிக்கை நடைபெற்றபோது மதிப்பிற்குரிய உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் அவர்கள் கேள்வி எழுப்பி பகுதிநேர ஆசிரியர்களின் நிலையை அனைவரும் அறியச் செய்தார்.

அதுபோலவே இந்த ஆண்டும் பகுதிநேர ஆசிரியர்களின் நிலைகுறித்து கேள்வி எழுப்ப உத்விடுமாறு கோரிக்கைகள் அடங்கிய விண்ணப்பத்தினை மதுரையில் சட்டமன்ற உறுப்பினர் அவர்களை நேரில் சந்தித்து அளித்தனர்.

மனுவில் இடம்பெற்ற முக்கிய கோரிக்கைகள்:

  • அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் மூலம் நியமனம் செய்யப்பட்ட 16,549 பகுதிநேர சிறப்பாசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். 
  • முறையான பணிப்பதிவேடு துவங்கி பராமரிக்க வேண்டும். 
  • 10 கிலோமீட்டர்களுக்கு மேல் பயணம் செய்து பணியாற்றுபவர்களுக்கு அரசாணையில் உள்ளதுபோல் 10 கிலோமீட்டர்களுக்கு உள்ளாக பணியிட மாறுதல் வழங்கிட வேண்டும். 
  • நிரந்தர ஆசிரியைகளுக்கு வழங்கப்படுவதுபோல் பகுதிநேர ஆசிரியைகளுக்கும் பேறுகால விடுப்பு வழங்கிட வேண்டும். 
தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் கவுரவத் தலைவர் திரு. சோலைராஜா அவர்கள் இதனை ஒருங்கிணைத்து செயல்படுத்த உதவினார்.

வறுமையில் வாடும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் வாழ்வாதாரம் மேம்பட நடைபெறவிருக்கும் கல்விமானியக் கோரிக்கையில் நல்ல முடிவுகள் எட்டப்பட வேண்டும் என்று நம்பிக்கையுடன் தவமிருக்கின்றனர்.

குஞ்சணைக்கும் தாய்க்கோழியைப்போல் குஞ்சுகளான பகுதிநேர சிறப்பாசிரியர்களை தாய்க்கோழியான மாண்புமிகு அம்மா அவர்கள் இறகணைத்துக்(பணிநிரந்தரம்) காத்திட வேண்டும்.

தாய்க்குத் தெரியாதா தன் குஞ்சுகளின் நிலை !!!
காக்கைக்கே தன்குஞ்சு பொன் குஞ்சு - எனில்
தங்கத் தாய்க்கு தன் குஞ்சுகள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக