முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

வெள்ளி, 11 ஜூலை, 2014

மூன்றாண்டுகளாக பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களை முழுநேர ஆசிரியர்களாக்க கோரிக்கை - பா.மா.க தலைவர் ஜி.கே. மணி

திண்டுக்கல், ஜூலை.11

மத்திய பட்ஜெட் மக்களுக்கு பயனளிக்கும் வகையிலும் ரெயில்வே பட்ஜெட் தமிழகத்துக்கு பயனற்ற பட்ஜெட்டாகவும் உள்ளது என பா.ம.க.தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.

பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி இன்று திண்டுக்கல் வந்தார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

மக்கள் தொகை வளர்ச்சிக்கேற்ப தரமான கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதாரம், அடிப்படை வசதிகள் ஆகியவை ஏற்படுத்தி தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பா.ம.க. ஆரம்பம் முதலே மதுவுக்கு எதிராக குரல் கொடுத்து போராடி வருகிறது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் வரை எங்கள் போராட்டம் தொடரும். பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பொது பட்ஜெட் மக்களை பாதிக்காத மக்கள் விரும்பும் நல்ல அம்சங்களை கொண்ட பட்ஜெட் ஆகும். குறிப்பாக 5 லட்சம் கோடி விவசாய கடனுக்கு முன்னுரிமை, விவசாய உற்பத்தியை பெருக்கும் வகையில் குளிர்பதன கிடங்கு, 24 மணி நேரம் தடையில்லா மின்சாரம், சூரிய ஒளி சக்திக்கு முன்னுரிமை, தமிழகத்தில் ஜவுளிபூங்கா, பொன்னேரியில் தொழில் நகரம் போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.

ஆனால் அதே வேளையில் ரெயில்வே பட்ஜெட் தமிழகத்துக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் ரெயில்கள் விடப்படாததால் இந்த பட்ஜெட் வருத்தம் அளிப்பதாக உள்ளது.

ஆசிரியர் பற்றாக்குறையை போக்க தற்போது நடைபெறும் சட்டமன்ற பள்ளி கல்வி மானிய கோரிக்கையின் போது அறிவிப்பு வெளிவர வேண்டும். தமிழகத்தில் கடந்த 3 வருடமாக பகுதிநேர ஆசிரியராக பணிபுரிந்து வரும் 16,500 பேரை முழு நேர ஊழியர்களாக பணியமர்த்த வேண்டும். 

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களைப்போல் தமிழக அரசும் விவசாயிகளுக்கு முழுமையான விவசாய கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.

திண்டுக்கல் மாநகராட்சியாக தரம் உயர்ததப்பட்டு 6 மாதம் ஆகியும் எந்தவித அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை. அருகில் உள்ள ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கும் போது அந்த ஊராட்சி மக்களிடம் கருத்து கேட்க வேண்டும். நூற்பாலைகளில் சுமங்கலி திட்டம் என்ற பெயரில் இளம்பெண்களை அடிமையாக்கும் திட்டம் குறித்து கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாநில துணை பொதுச்செயலாளர் ஜஸ்டின் திரவியம், கிழக்கு மாவட்ட செயலாளர் பரசுராமன், மாநில துணைச் செயலாளர் (சமூக நீதி பேரவை) வக்கீல் சிவக்குமார், இளைஞரணி துணைப்பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் இருந்தனர்.

நன்றி - மாலைமலர், புதிய தலைமுறை செய்திகள்

1 கருத்து:

  1. ஐயா மணி அவர்களே, 3 ஆண்டுகள் பகுதி நேரம் வேலை பார்த்தவர்களுக்கு பணி நிரந்தரம் வேண்டும் என்று கேள்வி கேட்பது நியாயம். ஆனால் 15 வருடம் முழு நேரம் வேலை பார்த்து தற்சமயம் அரசால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள கணினி ஆசிரியர்களும் தமிழ் நாட்டில் தான் இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு