முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

வியாழன், 3 ஜூலை, 2014

10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள 1268 தொடக்கப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு?

பத்து மாணவர்களுக்கும் குறைவாக உள்ள 1268 அரசு தொடக்கப்பள்ளிகளை மூட அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் 23 ஆயிரத்து 815 அரசு தொடக்கப்பள்ளிகள் உள்ளன. 

தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் இப்பள்ளிகளில் 14 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். தொடக்கப்பள்ளிகளில் மட்டும் சுமார் 60 ஆயிரத்து 980 ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி ஒரு பள்ளிக்கு இரண்டு ஆசிரியர் இருக்கவேண்டும். ஆனால் அரசு தொடக்கப்பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு ஓராசிரியர் என்ற கணக்கீடு பின்பற்றப்படுகிறது. 200 மாணவர்களுக்கு மேல் இருந்தால் 40 மாணவர்களுக்கு ஓராசிரியர் நியமனம் செய்யப்படுகின்றனர்.

அரசு தொடக்கப்பள்ளிகளில் கடந்த 10 ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது தமிழகம் முழுவதும் 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ளதாக சுமார் 1268 பள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளன. இப்பள்ளிகளை மூடிவிட்டு அந்த மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்த்து படிக்க வைப்பது குறித்து அரசு, கல்வித்துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட செயலாளர் தாமஸ் அமலநாதன் கூறுகையில், மாணவர் எண்ணிக்கை குறைவை காரணம் காட்டி பள்ளிகளை மூடினால் கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி கேள்விக்குறியாகிவிடும். 

பள்ளிகளை மூடுவதற்கு பதிலாக அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது குறித்து ஆக்கப் பூர்வமான ஆலோசனை நடத்தவேண்டும். தொடக்கப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகப்படுத்த எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடங்கவேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தப்படுகிறது, என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக