முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

வெள்ளி, 6 ஜூன், 2014

ஆசிரியர் காலிப்பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும் என்றஅறிவிப்பு வருகிற சட்டசபை கூட்டத்தில் வெளிவர வாய்ப்பு

ஆசிரியர் பணிக்கு நியமிக்கப்படுவோர்எண்ணிக்கை அதிகரிக்க உள்ளது.பாடவாரியாக உள்ள காலிப்பணியிடங்கள்விவரம் கேட்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.ஆசிரியர் காலிப்பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும் என்றஅறிவிப்பு வருகிற சட்டசபை கூட்டத்தில் வெளிவர வாய்ப்பு உள்ளது 

காலிப்பணியிடங்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில்காலியாக 15 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. அவற்றில்இடை நிலை ஆசிரியர் பணியிடங்கள் 2ஆயிரமும், பட்டதாரி ஆசிரியர்பணியிடங்கள் 13 ஆயிரமும் உள்ளன. இந்த இடங்களுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் முதல் கட்டமாக ஆசிரியர்தகுதி தேர்வை நடத்தி முடித்தது. தேர்வு முடிவையும் வெளியிட்டது. இதில் தேர்ச்சி சதவீதத்தில் 5 சதவீதத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தளர்த்தி உத்தரவிட்டார்.அதன்படி 150 மதிப்பெண்ணுக்கு 82 மதிப்பெண் எடுத்தாலே தேர்ச்சி பெற்றதாகும். ஆனால்தேர்ச்சி பெற்றுவிட்டதால் ஆசிரியர் வேலை கிடைத்துவிடும் என்பது கிடையாது. மதிப்பெண் வெயிட்டேஜ் அவர்கள் பிளஸ்–2 தேர்வில் எடுத்த மதிப்பெண், ஆசிரியர் பயிற்சியில் எடுத்த மதிப்பெண், ஆசிரியர்தகுதி தேர்வில் பெற்ற மார்க் ஆகியவற்றின் அடிப்படையிலும் இட ஒதுக்கீடு அடிப்படையிலும்இடை நிலை ஆசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு செய்ய உள்ளது. 

ஆசிரியர்களை தேர்வு செய்ய எப்படி மதிப்பெண் வெயிட்டேஜ் வழங்குவது என்று புதிய முறை கொண்டுவரப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய மேற்கொண்ட அதே முறையுடன் கூடுதலாக பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்ணையும் சேர்த்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இந்தநிலையில் இந்த வருடம் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பலர் பணியில்இருந்து ஓய்வு பெற்றுள்ளனர்.அதனால் காலிப்பணியிடங்கள் புதிதாக எவ்வளவு அதிகரித்து உள்ளனஎன்பதை பள்ளிகல்வித்துறை அதிகாரிகள் எடுத்து வருகிறார்கள். 

மேலும் பாட வாரியாக அதாவது தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல்,விலங்கியல், வரலாறு முதலிய பாடங்களுக்கு வகுப்பு நடத்திய ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள்எத்தனை உள்ளன என்று கணக்கிட்டு வருகிறார்கள். சட்டசபை கூட்டம் ஆசிரியர் பணியிடங்கள் எத்தனை காலியாக கிடக்கின்றன. எப்போது நிரப்பப்படும் என்ற அறிவிப்பு வருகிற சட்டசபை கூட்டத்தில் வெளிவர வாய்ப்பு உள்ளது. அதன் பின்னர் ஆசிரியர்தேர்வு வாரியத்திற்கு இந்த தகவல் கொடுக்கப்பட்டு ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கும். 

ஆசிரியர் தேர்வு வாரியம் முதல் கட்டமாக இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி அதிக மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் ஆசிரியர்களை தேர்வு செய்வார்கள். பின்னர் ஆசிரியர் தேர்வு வாரியம் அந்த பட்டியலை பள்ளிக்கல்வி இயக்குனரகம், தொடக்ககல்வி இயக்குனரகம் ஆகியவற்றில் ஒப்படைக்கும். கல்லூரி ஆசிரியர்களுக்கு நேர்முகத்தேர்வு அடுத்த கட்டமாக கலை அறிவியல் கல்லூரி ஆசிரியர்களை தேர்வு செய்யநேர்முகத்தேர்வு நடத்தி பணி நியமனத்திற்கான ஏற்பாட்டை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக