முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

வியாழன், 5 ஜூன், 2014

நாடு முழுவதும், ஆசிரியர் பயிற்சி முறையில், குஜராத் மாதிரியைப் பின்பற்ற, மத்திய மனித வளத்துறை முடிவு

நாடு முழுவதும், ஆசிரியர் பயிற்சி முறையில், குஜராத் மாதிரியைப் பின்பற்ற, மத்திய மனித வளத்துறை முடிவு செய்துள்ளது. 

ஆசிரியர் பயிற்சி முறை, மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. பொதுவாக, குறிப்பிட்ட, ஓராண்டோ அல்லது இரண்டு ஆண்டுகளோ பயிற்சி பெறும் மாணவர்கள், ஆசிரியர்களாக தேர்ச்சி பெற்று, பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்கின்றனர். 

ஆசிரியராக வேலைக்கு சேர்ந்த பிறகு அவர்கள், பெரிய அளவில் ஆசிரியர் பயிற்சி பெறுவதில்லை. இந்த முறை குஜராத்தில் கிடையாது. 

ஆசிரியராக இருப்ப வர்கள், மாதம் ஒருமுறை அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் பயிற்சிகளை நிறைவு செய்து கொண்டே இருக்க வேண்டும். குறிப்பாக, தகவல், தொழில்நுட்பம், அறிவியல், சட்டம் போன்ற பாடப் பிரிவுகளில் தொடர்ந்து பயிற்சி பெற்று வர வேண்டும். 

குஜராத்தில் பின்பற்றப்படும் இந்த முறையை, நாடு முழுவதும் அமல்படுத்த, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி முடிவு செய்துள்ளார். இது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக