முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 30 ஜூன், 2014

ஆசிரியர் - மாணவர் உறவை மேம்படுத்த கவுன்சிலிங்:பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா?

 மாணவர் உறவை பலப்படுத்த, முதல்கட்டமாக,ஆசிரியர்களுக்கு "கவுன்சிலிங்' தர, பள்ளி கல்வித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைஎழுந்துள்ளது. திருப்பூரில், வீரபாண்டி அரசு பள்ளியில் படித்த, பிளஸ்2 மாணவி சுவாதி, கடிதம் எழுதி வைத்துவிட்டு, நேற்று முன்தினம்தற்கொலை செய்துகொண்டார். அம்மாணவி எழுதிய கடிதத்தில், "தன்னுடைய இம்முடிவுக்கு, ஆசிரியர்கள் தன்னை நடத்திய விதமேகாரணம்,' என தெரிவித்துள்ளார். அதே நாளில், குமார் நகர்மாநகராட்சி பள்ளி, பிளஸ் 2 மாணவன் ஸ்டீபன்ராஜ், வீட்டில் விஷம்அருந்திய நிலையில், மயங்கி கிடந்தார். அவர், அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, உயிர் பிழைத்துள்ளார்.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் பொதுத்தேர்வு முடிவுவெளியாகும்போது, தேர்ச்சியடையாத மாணவர்களில் சிலர்,தற்கொலை என்ற தவறான முடிவெடுப்பது வழக்கம். 

தன்னுடன்படிக்கும் சக மாணவர்களை போல், படிப்பில் சிறந்து விளங்கமுடியவில்லையே; படிப்பில் பின்தங்கிவிட்டோமே என்ற தாழ்வுமனப்பான்மை, தேர்ச்சி பெறாததால், மற்றவர்களின் கேலிக்கும்,கிண்டலுக்கும் ஆளாக நேருமே, என்ற அச்ச உணர்வு, அவர்களைதற்கொலை என்ற முடிவுக்கு தள்ளி விடுகிறது."டீன்-ஏஜ்' எனும்விடலை பருவத்தில், வாழ்க்கை பற்றிய முழுமையான புரிதல்அவர்களிடம் இருப்பதில்லை. படிப்பு மட்டுமே வாழ்க்கைக்குமுக்கியம்; படிக்கவில்லை என்றால், எதிர்காலம் இருண்டு விடும்என ஆசிரியர்களும், பெற்றோரும் மாணவர்களுக்கு அடிக்கடிஅறிவுறுத்தி, ஒருவிதத்தில் பயமுறுத்தி விடுகின்றனர்.படிப்பில்பின்தங்கிய மாணவர்களிடம் மற்ற திறமைகள் இருந்தாலும், அதைவெளிக்கொணர ஆசிரியர்களோ, பெற்றோர்களோ அக்கறைகாட்டாமல், அவர்களுக்கு விளங்காத, மனதில் பதியாத பாடத்தைபடிக்குமாறு வற்புறுத்துகின்றனர்.

எப்போதும் படித்துக் கொண்டே இருக்குமாறு,கட்டாயப்படுத்துகின்றனர். ஒரு கட்டத்தில், படிப்பு என்பது கசப்பானமருந்தாக, அவர்களுக்கு மாறிவிடுகிறது.ஆசிரியர்களில் சிலர்,தங்களை கண்டிப்பானவர்களாக, மாணவர்கள் மத்தியில்காட்டிக்கொள்ள விரும்புகின்றனர். வகுப்பறையில் மாணவர்களிடம்நட்பாக பேசவோ, உரிமையாக பழகவோ முன்வருவதில்லை.தனித்திறமைகளை ஊக்கப்படுத்தவோ, உற்சாகப்படுத்தவோ ஆர்வம்காட்டுவதில்லை. நன்றாக படிக்கும் மாணவர்களை உதாரணமாககாட்டி, படிப்பில் பின்தங்கியவர்களை வார்த்தைகளால்காயப்படுத்துகின்றனர்.குடும்ப சூழல் சரியில்லாத நிலையில், பள்ளிவகுப்பறையிலும் மோசமான சூழல் நிலவுவது சில மாணவர்களுக்குமன உளைச்சலை ஏற்படுத்துகிறது. வீட்டிலும், பள்ளியிலும்இறுக்கமான சூழல் நிலவும் பட்சத்தில், வாழ்க்கை மீது அதிருப்தியும்,வெறுப்பும் அவர்களுக்கு ஏற்படுகிறது. அந்நேரங்களில் ஏற்படும்சின்ன சின்ன அவமானங்களும், தோல்விகளும் கூட, அவர்களுக்குமிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அதன் விளைவாக தற்கொலை போன்ற தவறான முடிவைஎடுக்கின்றனர்.தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "இன்றையகாலகட்டத்தில் ஆசிரியர் - மாணவர் உறவு, பலவீனமாகி விட்டதுமறுக்க முடியாத உண்மை. குரு - சிஷ்யன் உறவு புனிதமானது.எதிர்கால இந்தியா, வகுப்பறையில் கண்முன் அமர்ந்திருப்பதை, பலஆசிரியர்கள் உ<ணர்வதில்லை. ஒரு ஆசிரியர், நல்ல வழிகாட்டியாகதிகழ வேண்டும். "கல்வியோடு மட்டுமின்றி, வாழ்க்கை பற்றியகற்பித்தலும் வகுப்பறையில் அவசியம். "சிலபஸ்' முடித்தால்போதும்; மாணவர்கள் தேர்ச்சி பெற்றால் போதும் என்பதே, பலஆசிரியர்களின் எண்ணமாக உள்ளது. இது, மாற வேண்டும்.மாணவர்களுடன் நல்லுறவு பேணுவது குறித்து, ஆசிரியர்களுக்கு"கவுன்சிலிங்' தர வேண்டும். . அதற்கு கல்வித்துறை உடனடியாகநடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக