முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

வெள்ளி, 27 ஜூன், 2014

'போலி' பணி நியமன ஆணை: சம்பளத்தை திரும்பப் பெற நடவடிக்கை

வேலூரில், 'போலி' பணி நியமன ஆணை வழங்கிய, அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர், 'சஸ்பெண்ட்' ஆனது அம்பலமாகியுள்ளது. வேலூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலராக மதி பணிபுரிந்து வந்தார். இவரை, சஸ்பெண்ட் செய்து, பள்ளி கல்வித் துறை செயலர் சபிதா, 20ம் தேதி உத்தரவிட்டார்.

இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த, 2012ல், எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில், வேலூர் மாவட்டத்தில், பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதில், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், 220 பேர் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டது. பட்டியலில் உள்ளபடி, 160 பேருக்கு, பணி நியமன ஆணை வழங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள, 60 பேரிடம், தலா, ஒரு லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு, பணி நியமன ஆணையை, முதன்மை கல்வி அலுவலர் மதி வழங்கியுள்ளார். அப்போது, ரெகுலர் முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றிய பொன்குமார், விடுமுறையில் இருந்ததால், அவரது கையெழுத்தை, போலியாக போட்டு, பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக முதல்வரின் தனிப்பிரிவில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, முதன்மை கல்வி அலுவலர் மதி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், போலி கையெழுத்திட்டு, பணி நியமனம் பெற்றவர்கள் குறித்த பட்டியல் சேகரிக்கப்படுகிறது. அவர்களை பணி நீக்கம் செய்யவும், இரு ஆண்டுகள், அவர்கள் வாங்கிய சம்பளத்தை திரும்பப் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக