முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

வெள்ளி, 6 ஜூன், 2014

1800 அரசுப்பள்ளிகள் தரம் உயர்வு:ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டம் தொய்வு

தமிழகத்தில் 2015ம் ஆண்டுக்குள் 1800 அரசு நடுநிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தும் என்ற அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்ட இலக்கில் தொய்வுஏற்பட்டுள்ளது.

'இத்திட்டத்தின் கீழ் (ஆர்.எம். எஸ்.ஏ.,) 5 கி.மீ.,க்கு ஒரு உயர்நிலைப் பள்ளி என்ற அடிப்படையில் 2015க்குள் தமிழகம் முழுவதும் 1800க்கும் மேற்பட்ட அரசு நடுநிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்' என, அறிவிக்கப்பட்டது. இதன்படி, 2009-10ல் 200; 2011-12ல் 345; 2012-13ல் 710; கடந்த ஆண்டு 50 பள்ளிகள் என, 1,300 பள்ளிகள் மட்டுமே தரம் உயர்த்தப்பட்டுள்ளன. வரும் கல்வி ஆண்டில் இலக்கு நிறைவேறுமா என சந்தேகம் எழுந்துஉள்ளது. இதற்கான நடவடிக்கை தொய்வாக இருக்கிறது என ஆசிரியர்கள் சங்கங்கள் கூறுகின்றன.சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'தமிழகத்தில் இத்திட்டத்திற்கான நிதியை அதிகரித்து, கல்வியை ஊக்குவிக்க வேண்டும். ஏற்கனவே அறிவித்தப்படி 2015க்குள் 1800க்கும் மேற்பட்ட பள்ளிகளை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக