முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

புதன், 18 டிசம்பர், 2013

6 முதல் 8ம் வகுப்பு வரை உபரி ஆசிரியர்களை கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு.

பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட்1ம் தேதியில் உள்ளபடி மாணவ மாணவியர் எண்ணிக்கையின் அடிப்படையில் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களையும்,கூடுதலாக தேவைப்படும் பணியிடங்களையும் கண்டறிய வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பான உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளி அளவை பதிவேடை (ஸ்கேல் ரெஜிஸ்டர்) பார்வையிட்டு பணியிடங்களின் எண்ணிக்கையை துல்லியமாக சரிபார்த்து கடந்த ஆகஸ்ட்1ம் தேதி மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்ய வேண்டும்.

குழந்தைகள் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின்படி6முதல்8ம் வகுப்பு வரை ஆசிரியர் பணியிடம்1:35என்ற விகிதாச்சார அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.பாடவாரியான உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பணி நிரவல் செய்திட ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளபடி 9, 10ம் வகுப்புகளுக்கு ஆசிரியர் & மாணவர் விகிதாச்சாரம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

இதில் ஆர்எம்எஸ்ஏ விதிகளின்படி 160 மாணவர்களுக்கு 5 பணியிடங்கள், கூடுதல் 30மாணவர்களுக்கு 1பணியிடம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.பள்ளிகளில் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும்,ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணி பங்கீட்டை விரிவாக ஆய்வு செய்து பாட வேளைகள் உரிய விதிகளின்படி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் செய்த பின்னர் உபரி என கண்டறியப்படும் ஆசிரியர்களை பள்ளி கல்வி இயக்ககம் மூலம் அறிவுரைகள் வழங்கப்பட்ட உடன் பணிநிரவல் செய்து ஆணை வழங்க வேண்டும்.அரசு,நகராட்சி உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளை பொறுத்தவரையில் ஆசிரியரின்றி உபரி என்று கண்டறியப்படும் பணியிடங்களை மாணவர் எண்ணிக்கை அதிகம் உள்ள பள்ளிகளுக்கு பகிர்ந்தளிக்கத்தக்க வகையில் கருத்துருக்கள்,உரிய படிவத்தில் முதன்மை கல்வி அலுவலர்களால் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக