இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த அரசியல் தலைவரும் இந்தியமுசுலிம் அறிஞரும் முதல் இந்திய கல்வி அமைச்சரும் ஆகிய மௌலான அபுல்கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த நாளான இன்று தேசியக்கல்வித் தினமாக கொண்டாடப்படுகிறது.
சமய அடிப்படையிலான இந்தியப் பிரிவினையை எதிர்த்து இந்து- முசுலிம் ஒற்றுமையை வலியுறுத்திய
முசுலிம் தலைவர்களில்
முதன்மையானவர். பாக்கித்தான் பிரிவினையையும்
அங்கு இராணுவ ஆட்சி ஏற்படப்போவதையும் முன்னரே தெரிவித்த பெருமை உடையவர். 1992ஆம் ஆண்டு இவருக்கு இந்தியாவின்
உயரிய குடிமை விருதான பாரத ரத்னா மறைந்த பிறகு வழங்கப்பட்டது.
பரவலாக இவர் மௌலானா ஆசாத்என அறியப்படுகிறார்; ஆசாத் (விடுதலை) என்பது இவர் வைத்துக்கொண்ட
புனைப்பெயராகும். இந்தியாவில் கல்வித்துறைக்கு சரியான அடித்தளமிட்ட இவராற்றிய பணியை நினைவுகூறும் வகையில் இவரது பிறந்த நாள் தேசிய கல்வி நாளாகக் கொண்டாடப்படுகிறது. புதுதில்லியில் உள்ள மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள் இவரது பெயரைத் தாங்கி உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக