By திருச்செங்கோடு
First Published : 06 October 2013 03:16 AM IST
பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர சிறப்பாசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருச்செங்கோட்டில் சனிக்கிழமை பகுதி நேர ஆசிரியர்கள் சங்கக் கூட்டம் நடைபெற்றது. இதில், மல்லசமுத்திரம், திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம், குமாரபாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பகுதி நேர ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதீசன் தலைமை வகித்தார். சுரேஷ்குமார் வரவேற்றார். மாநிலத் தலைவர் ராமர், பொதுச்செயலர் கோவிந்தராஜு ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.கூட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்:
தமிழ்நாடு முழுவதும் 2011-12 ஆம் கல்வியாண்டில் ஓவியம், உடல்கல்வி, இசை, கணினி, தோட்டக்கலை, தையல், கட்டடக்கலை போன்றவைகளுக்கு 16,549 ஆசிரியர்களை நியமித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
கிராமக் கல்விக் குழு மூலம் வழங்கப்பட்ட ஊதியத்தை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்த உத்தரவிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
அண்மையில் மரணமடைந்த ஐந்து பகுதி நேர ஆசிரியர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு நிதி உதவி அளிக்க வேண்டும்.
தேர்வு மற்றும் தேர்தல் வேலைகளை பகுதி நேர ஆசிரியர்களுக்கும் தர வேண்டும்.
தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீடு, மகளிருக்கு மகப்பேறு விடுப்பு, விபத்துக் காப்பீடு ஆகியவையும் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
Thanks - Dinamani
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக