முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 30 செப்டம்பர், 2013

பகுதி நேர ஆசிரியர் முதல்வருக்கு நன்றி

பெரம்பலூர்: அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு மாத ஊதியத்தை வங்கியின் மூலம் பெற ஆவணம் செய்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்க பெரம்பலூர் மாவட்ட கிளை சார்பில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:

அரசுஉயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர சிறப்பாசிரியர்களது மாத ஊதியத்தை வங்கி மூலமாக பெற ஆவணம் செய்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்த கம்யூட்டர் ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட சிறப்பு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாததால் பணி நீக்கம் செய்யப்பட்ட 652 பணியிடங்கள் மற்றும் கம்ப்யூட்டர் ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு வாரியத்தின் மூலம் புதிதாக மேற்கொள்ளப்பட உள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர் பணி நியமனத்தில் தற்போது அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் ஐந்தாயிரம் ரூபாய் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வரும் பகுதி நேர கம்ப்யூட்டர் சிறப்பாசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி - தினமலர்

பகுதிநேர ஆசிரியர்களின் தாமதமில்லா ஊதியக் கனவை நனவாக்கவிருக்கும், தமிழக அரசுக்கு, www.ssaptst.blogspot.in வாயிலாக, அனைத்து பகுதிநேர ஆசரியர்களின் சார்பாக கோடானுகோடி நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக