முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

சனி, 21 செப்டம்பர், 2013

தேனி சி.இ.ஓ., அலுவலகத்தில் குவிந்த பகுதிநேர ஆசிரியர்கள்

தேனி : தேனி சி.இ.ஓ., அலுவலகத்தில், பகுதிநேர சிறப்பாசிரியர்கள் 150 பேர் குவிந்து முழு சம்பளம் வழங்க வலியுறுத்தி மனு கொடுத்தனர். 

தேனி மாவட்டத்தில் உள்ள பகுதிநேர சிறப்பாசிரியர்கள் 150 பேர், நேற்று மாலை 4 மணியில் இருந்து, மாலை 6.30 மணி வரை, தேனி முதன்மை கல்வி அலுவலகத்தில் குவிந்தனர். அவர்கள் முதன்மை கல்வி அலுவலர் வாசு, கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் ஆகியோரிடம் கொடுத்த மனு:
 
கடந்த ஆண்டு மார்ச் மாதம், அரசு பள்ளிகளில் சிறப்பாசிரியர்களாக பணியில் சேர்ந்தோம். வாரத்தில் மூன்று அரை நாட்கள், மாதம் பன்னிரெண்டு அரை நாட்கள் வீதம் மாதம் 5000 ரூபாய் தொகுப்பூதியத்தில் பணி புரிந்து வருகிறோம். இந்த ஊதியத்தில் பாதி, பஸ் கட்டணத்திற்கே செலவாகிறது. மீதமுள்ள பணத்தை கொண்டு குடும்பத்தை நடத்தி வருகிறோம்.

இந்த மாதம் காலாண்டு தேர்வு விடுமுறையை காரணம் காட்டி, எங்களது பள்ளியில் பணி வருகை நாட்களை ஒன்பது நாட்களாக குறைப்பது, என முடிவு செய்துள்ளனர். இதனால் எங்களது மாத ஊதியம் குறையும். அரசு ஆணைப்படி, காலாண்டு, அரையாண்டு விடுமுறை நாட்களிலும் பணிபுரியலாம், என்றுள்ளது. தலைமையாசிரியர்களின் விருப்பத்தின் பேரில் மாணவர்களுக்கு நலன் அளிக்கும் வகையிலும் மற்ற பணிகளையும் மேற்கொள்ளலாம், என அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

எனவே, காலாண்டு தேர்வை காரணம் காட்டி, வேலை நாட்களை குறைத்து சம்பளத்தை குறைத்து வழங்க கூடாது, என மனுவில் கூறியிருந்தனர்.
 
மனுவை பெற்றுக்கொண்ட முதன்மை கல்வி அலுவலர், இது குறித்து சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில், ஆலோசனை பெற்று பிரச்னைக்கு தீர்வு காணப்படும்,என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக