முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 30 செப்டம்பர், 2013

தொகுப்பூதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை

தமிழகத்தில் 1.6.2006 ஆம் ஆண்டுக்கு முன் தொகுப்பூதியத்தில் பணியில் அமர்த்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை, பணியில் சேர்ந்த நாள் முதல் பணி வரன்முறை செய்ய வேண்டும் என, முதல்வருக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இக்கழகத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம், ஞாயிற்றுக்கிழமை மதுரையில் மாநிலத் தலைவர் பி. இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத் தீர்மானங்கள் வருமாறு:

1.6.2006-க்கு முன் பல்வேறு காலங்களில் தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை பணியில் சேர்ந்த நாள் முதல் பணி வரன்முறைப்படுத்திட முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும். சமூக அறிவியல் பாடத்துக்கு 7 பாடவேளைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

தேர்வு பணிகளுக்கு வழங்கிடும் உழைப்பூதியத்தை இருமடங்காக உயர்த்தி வழங்க வேண்டும். பட்டதாரி தமிழ் ஆசிரியர்களுக்கு பி.எட். பட்டம் பெற்ற நாள் முதல் பணிமூப்பு கணக்கிட்டு, உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணி வழங்க வேண்டும்.

கோடை விடுமுறை காலங்களில் விடைத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, அந்நாள்களை ஈடுசெய்யும் விடுப்பாக வழங்கிட வேண்டும்.

விடைத்தாள் திருத்தும் மையங்களில் பணியமர்த்தப்படும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒரே மாதிரியான தினப்படி வழங்க வேண்டும். 

அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும், உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணி நிலையில், உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

முதுகலை ஆசிரியர் நேரடி நியமனம் வழங்கிடும் முன்பாக பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். காலியாகவுள்ள அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.

பட்டதாரி ஆசிரியர்களை கற்பித்தல் பணி தவிர பிற பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது. ஆசிரியர்களுக்கான குறைதீர் கூட்டங்களை கல்வி மாவட்ட மற்றும் வருவாய் மாவட்ட அளவில் தொடர்ந்து நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

thanks - tnkalvi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக