முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

இடைநிலைக் கல்வியில் - கணினி அறிவியல் கல்வி

நமது தமிழக அரசு, ‘கற்றல் மிகுந்திடில் ... கழிந்திடும் மடமை...’ என்ற பொன் மொழியை செயலாக்கும் பொருட்டு, மாணவர்களின் அனைத்து விதமான கல்வித்திறன்களையும் வளர்க்கும் நோக்கில், சமச்சீர்கல்வித்திட்டத்தை செயல்படுத்தி வருவது பாராட்டுதலுக்குரியது.

மேலும் அனைவருக்கும் கல்வித்திட்டத்தில் வாயிலாக எழை, எளிய மாணவர்களும் உயர்கல்வியறிவை பெறும் விதமாக கணினி முதலான பாடங்களைக் கற்றுத்தர தமிழக அரசு முனைந்துள்ளது.  இதன் ஒரு பகுதியாக ‘ 6 முதல் 10 வகுப்புகளுக்கு கணினி அறிவியல் பாடத்திட்டம் உருவாக்கப்படுவதாக ’ , 2013 மார்ச் 3 காலைக் கதிரில் செய்தியானது.

‘கல்வி வியாபாரமாகக் கூடாது’ என்ற எண்ணத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கு வெவ்வேறு திட்டத்தின் கீழ் படிப்படியாக கணினிகள் வழங்கப்பட்டது மட்டுமின்றி, சுமார் 5400 பகுதிநேர ஆசிரியர்களையும் இடைநிலை, உயர்நிலை, மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் நியமித்துள்ளது.

இவர்கள் பணியிடங்கள் தற்காலிகப் பணியிடங்களாக பகுதிநேரமாக உள்ளது.

இவ்வாசியர்கள் நியமனத்தையும், கணினிகள் வழங்குவதையும் அரசே நேரடியாக செய்துள்ளது கல்வித் தரத்தை உயர்த்தும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

முன்பு 1999 ஆம் ஆண்டு தனியார் நிறுவத்தின் வாயிலாக வழங்கப்பட்ட கல்வியிலும், ஆசிரியர்கள் நியமனத்திலும் குறைகள் ஆங்காங்கே இருந்ததை அரசு நன்கு உணர்ந்துள்ளது. உதாரணமாக, 1999 ஆம் ஆண்டு கணினி ஆசிரியர்களை, உலகத்தரமிக்க நிறுவனங்கள் நியமித்தாலும் அவர்களில் பலர் தமிழக அரசின் தகுதித்தேர்வில் தேர்ச்சிப் பெற வில்லை என்றால் அதுமிகையாகாது.

ஆனால் பகுதிநேர ஆசிரியர்களை தேர்வு செய்யும் பொழுது அரசு மிகக் கவனமாக, நேர்முகத்தேர்வுகளை நடத்தி, ஆசிரியர்களின் திறன்களை சோதித்து, மதிப்பெண்களை வழங்கி, தகுதியானவர்களை மட்டுமே நியமித்துள்ளது.

இவ்வாசிரியர் கையாளும் பாடத்திட்டமும், மாணவர்களின் கணினித்திறனை வளர்க்கும் விதமாக, 2011 க்கு முன்பு வழங்கப்பட்ட பழைய பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு, விரைவில் உருவாக்கப்படும் என்ற செய்தி அனைவருக்கும் மகிழ்வூட்டுவதாக உள்ளது.

இதற்கிடையில் ரூபாய் 86 கோடி செலவில் 5 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் கணினிக் கல்வி கற்பிக்கப்படும் என்ற செய்தி மாலை மலரில் சென்ற ஆகஸ்டு 9, 2013 அன்று வெளியானது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

விரைவில் இக்குழப்பம் நீக்கப்பட்டு,
பாடத்திட்டம் வழங்கப்பட்டு,
பகுதிநேர ஆசிரியர்கள் முழுநேர ஆசிரியர்களாக்கப்பட்டு,
தமிழக அரசு மற்ற மாநிலங்களுக்கு,
முன்னுதாரணமாக விளங்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

3 கருத்துகள்:

  1. ஏன் சார்,

    ஒரு வரியில் சொன்னா என்னா சார் ?

    புக் குடுங்க ! பாடத்திட்டம் கொடுங்க!
    ஆபீஷ் வேலை செய்ய சொல்லாதீங்க என்று !

    பதிலளிநீக்கு
  2. ஏற்கனவே கணினி ஆசிரியர்கள் தகுதியின்றி பணி நீக்கம்.
    இப்ப திரும்ப கான்ட்ரக்டா ! என்ன கொடுமை இது.

    பதிலளிநீக்கு
  3. இந்த TRB கணினி ஆசிரியர்களை மட்டும் தேர்வே செய்யாதா?

    பதிலளிநீக்கு