பகுதிநேர கணினிப் பயிற்றுநர்கள் தங்களை நிரந்தர பயிற்றுநராக்கவும், மேல் நிலைப் பள்ளிகளில் கணினி பயிற்றுநராக்கவும் வேண்டி மனு கொடுத்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது :-
கணினிப் பயிற்றுநர்கள் நியமன வரலாறு :
அரசு மேல் நிலைப் பள்ளிகளில், கடந்த 1999 ஆம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் 1850 கணினி பயிற்றுநர்கள், தனியார் நிறுவனத்தின் மூலமாக தற்காலிக பயிற்றுநர்களாக ரூ. 2500/- தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் நிறுவன ஒப்பந்தம் 2004 ஆம் ஆண்டு நிறைவு பெற்ற நிலையில், இப்பயிற்றுநர்கள் தங்களை அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இக்கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, 2006 ஆம் ஆண்டு அரசாணையை வெளியிட்டு, 2008 ஆம் ஆண்டு ஒரு தகுதித் தேர்வை நடத்தியது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற 1058 கணினிப் பயிற்றுநர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.
தேர்வில் தவறியவர்களுக்கு, இரண்டாம் தேர்வு 2010 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அத்தேர்வில் தேறிய 140 கணினிப் பயிற்றுநர்கள் பின்னர் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.
எஞ்சிய கணினிப் பயிற்றுநர்களும் தொடர்ந்து பணியாற்றிய நிலையில், தற்போது பணியிலிருந்து நீக்கப்பட்டனர். இவர்கள் மறுபயிற்றுநர்கள் நியமிக்கும் வரையில் பணியாற்றாமல் உடனடியாக பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
காலிப்பணியிட விவரம் :
இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்ட 652 பணியிடங்களுடன், புதிதாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பணியிடங்களும் சேர்ந்து சுமார் 2000 கணினிப் பயிற்றுநர் பணியிடங்கள் காலியாக உள்ளது.
இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அரசு விரைவில் வெளியிட உள்ளதாகத் தெரிகிறது.
பகுதிநேர கணினிப் பயிற்றுநர்களின் கோரிக்கை :
தமிழக அரசு, மாவட்ட அளவில் நேர்முகத்தேர்வு நடத்தி, கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அரசாணை எண். 177 நாள். 11.11.2011 ன் படி, தமிழகம் முழுவதும், இடைநிலை வகுப்புகளுக்கு, சுமார் 5400 பகுதிநேர கணினிப் பயிற்றுநர்களை நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வுச் செய்தது.
இப்பயிற்றுநர்களாகிய நாங்கள் பல ஆண்டுகள் கணினி ஆசிரியர்களாக பணியில் சேர்வதற்கு முன்பே பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையைக் கருத்தில் கொண்டு, எங்களை முழுநேர கணினிப் பயிற்றுநர்களாக மாற்றி முழு ஊதியம் வழங்குவதோடு மட்டுமல்லாமல், மேல் நிலைப்பள்ளிகளில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் போது எங்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்று பணிவுடன் வேண்டுகிறோம்.
கோரிக்கை மனுவைப் படிக்க இங்கே அழுத்தவும்
மேற்கண்ட கோரிக்கைத் தொடர்பான பழைய பத்திரிக்கை செய்திகளை அறிய
கோரிக்கை மனுவைப் படிக்க இங்கே அழுத்தவும்
மேற்கண்ட கோரிக்கைத் தொடர்பான பழைய பத்திரிக்கை செய்திகளை அறிய
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக