மண்ணச்சநல்லூர், : திருச்சி அருகே உடற்கல்வி ஆசிரியையை தலைமையாசிரியர் தரக்குறைவாக பேசியதாக புகார் தெரிவித்து பகுதிநேர சிறப்பாசிரியர்கள் பள்ளியை முற்றுகை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி பகுதிநேர சிறப்பாசிரியையாக பணியாற்றி வருபவர் சரண்யா (24). இவர், தொட்டியம் அருகே உள்ள எம்.களத்தூ ரில் இருந்து தினமும் பள் ளிக்கு பணிக்கு வருகிறார்.
இந்நிலையில், இவருக்கு கடந்த ஜூன் மாத சம்பளமாக ரூ.5 ஆயிரத்திற்கு பதில் ரூ.3,500 வழங்கப்பட்டது. இது குறித்து தலைமையாசிரியர் சம்பத்திடம் கேட்டபோது தன்னை தரக்குறைவாக பேசியதாக சரண்யா சக ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளார். இதைதொடர்ந்து பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தினர் நேற்று தலைமையாசிரி யரை கண்டித்து பள்ளி முன் முற்றுகை போராட் டம் நடத்தினர்.
இதில் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சேசுராஜா, பொருளாளர் மனோகரன், மாவட்ட துணைத்தலைவர்கள் ரத்தினகுமார், சுரேஷ், சத்யா உள்பட சுமார் 50 பேர் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் கூறுகை யில், பள்ளிக்கு 9.30 மணி க்கு வந்தாலும் தாமதமாக வருவதாக எச்.எம் திட்டுகி றார். கைக்குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்று விடுமுறை கேட்டா லும் கொடுப்பதில்லை என்று புகார் தெரிவித்தனர்.
இது குறித்து தலைமையாசிரியர் சம்பத்திடம் கேட்டபோது, உடற்கல்வி ஆசிரியை முன்னுதாரணமாக இருந்து பள்ளிக்கு முன்னதாக வந்து மாணவி களை ஒழுங்குபடுத்தி வகுப்புக்கு அனுப்ப வேண்டும். குறிப்பிட்ட உடற்கல்வி ஆசிரியை நீண்ட தூரத்தில் இருந்து வருவதால் தினமும் பள்ளிக்கு தாமதாமாக வருகிறார். இது குறித்து தான் அவரை கண்டித் தேன். கடந்த ஜூன் மாதம் அவர் எட்டரை நாட்கள் தான் பள்ளிக்கு வந்துள் ளார். 12 வேலை நாட்கள் பள்ளிக்கு வந்தால்தான் முழுச்சம்பளம் கொடுக்க வேண்டும். விதிமுறைப்படியே அவருக்கு ரூ.3,500 சம்பளம் கொடுக்கப்பட்டது. மீதி சம்பளம் அரசு கணக்கில் திரும்ப செலுத்தப்பட்டு விட்டது என்றார்.
இதற்கிடையே போராட் டம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரணவன், சம்பவ இடத்திற்கு வந்து ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இது குறித்து முழு விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து ஆசிரியர்கள் முற்றுகையை கைவிட்டனர்.
நன்றி - தினகரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக