முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 29 ஜூலை, 2013

பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும் சிறப்பு ஆசிரியர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

நெல்லை - பதிவு செய்த நாள் : Jul 28 | 06:55 pm

பகுதி நேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று சிறப்பு ஆசிரியர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டையில் உள்ள சரோஜினி நினைவகத்தில் நேற்று நடந்தது. மாநில பொருளாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் செல்வகுமார், ரகுமான், சண்முகசுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தீர்மானங்கள்

கூட்டத்தில், பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும். தற்போது வழங்கப்படுகின்ற ஊதியம் ரூ.5 ஆயிரத்தை உயர்த்தி ரூ.10 ஆயிரமாக வழங்க வேண்டும். மே மாதத்திற்கும் ஊதியம் வழங்க வேண்டும். மற்ற பிரிவு ஆசிரியர்களுக்கு உள்ளது போல் சிறப்பு ஆசிரியர்களுக்கும் கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே கவுன்சிலிங் மூலம் இட மாறுதல்கள் வழங்கவேண்டும். குருவிகுளம் வட்டாரத்தில் சிறப்பு ஆசிரியர்களுக்கு ரூ3 ஆயிரத்து 500 வழங்கப்படுகிறது. அவர்களுக்கும் மற்ற ஒன்றியத்தில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கு வழங்குவது போல் ரூ.5 ஆயிரம் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நன்றி - தினதந்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக