முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 15 ஜூலை, 2013

பகுதிநேர ஆசிரியர்கள் குறித்த செய்தி - தினமலர் டீக்கடை பென்ட்ச் பகுதியில் வெளியானது

கீழ்கண்ட செய்தி தினமலர் நாளிதழில் டீக்கடை பென்ட்ச் பகுதியில் வெளியாகியுள்ளது

"அரசு பள்ளிகள்ல, பதினாறாயிரம், பகுதி நேர ஆசிரியர்கள், வேலை பார்த்துக்கிட்டு இருக்காங்க... அரசு, இவங்களுக்கு, மாதம், 5,000 ரூபாய் சம்பளம் தருது... போன ஜூன் மாதம், வெயில் காரணமா, பள்ளி திறப்பதை, 10ம் தேதிக்கு, தள்ளி வைச்சிட்டாங்க... இதுல, மூணு நாள், பகுதி நேர ஆசிரியர்களுக்கு, வேலை நாளா கணக்காயிடிச்சு...
""லீவை காரணம் காட்டி, 1,250 ரூபாயை, எல்லாரோட சம்பளத்துலயும் பிடிச்சிட்டாங்க... வாங்கறதே, 5,000... இதுல, இவ்வளவு தொகையை பிடிச்சா, குடும்பத்தை எப்படி ஓட்டறதுன்னு, எல்லாரும் புலம்பறாங்க... "அரசு லீவு விட்டதுக்கு, நாங்க என்ன பண்ண முடியும்; இதுல, எங்க மேல, என்ன தப்பு இருக்கு'ன்னு கேட்கறாங்க..."

நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக