ஈரோடு:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின், 65வது பிறந்த தினத்தை முன்னிட்டு,
முதல்வரின், 65 அரிய படங்களை கொண்டு, ஈரோட்டை சேர்ந்த ஓவிய ஆசிரியர்
ஸ்டாம்ப் தயாரித்துள்ளார்.ஈரோடு மாவட்டம் அரச்சலூர் தேவனாம்பாளையத்தை
சேர்ந்தவர் சாலமன். இவர், சிவகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பகுதி
நேர ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அ.தி.மு.க., விசுவாசியான இவர்,
தமிழக அரசின் ஓராண்டு சாதனைகள் என்ற தலைப்பில், நாளிதழில் வெளியான மூன்று
பக்க செய்திகளை, ஒரே இன்லேண்ட் கடிதத்தில் எழுதி, தமிழக முதல்வர்
ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைத்தார்.இந்நிலையில், சில நாட்களுக்கு முன், தமிழக
அரசு ஈராண்டு சாதனையை கொண்டாடியது. இதனையொட்டி, அரசின் ஈராண்டு சாதனை
மற்றும், முதல்வரின் பிறந்தநாளை நினைவு கூறும் வகையில், 65 முதல்வரின்
வித்தியாசமான புகைப்படங்களை கொண்டு, ஓவியர் சாலமன் ஸ்டாம்ப் தயாரித்து,
முதல்வருக்கு அனுப்பி வைத்துள்ளார்.இதுகுறித்து ஓவியர் சாலமன்
கூறியதாவது:முதல்வரின் பிறந்த தினம், அரசின் ஈராண்டு சாதனையை நினைவு கூறும்
வகையில், சிறுவயது முதல், தற்போதுள்ள வரையிலான முதல்வரின் புகைப்படங்களை
சேகரித்து, அதில், 65 படங்களை கொண்டு, ஸ்டாம்ப் தயாரித்துள்ளேன்.குழந்தை
பருவத்தில் உள்ள இரு படமும், இளம் பருவத்தில் உள்ள படம் ஒன்றும், முதல்வர்
ஜெயலலிதா, அவரது தாயுடன் இருப்பதை போன்ற, இரு படங்களும், இதில் அடக்கம்,
என்றார்.
நன்றி - தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக