முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

வியாழன், 27 ஜூன், 2013

6 லட்சம் டி.இ.டி., விண்ணப்பங்கள் விற்பனை: ஜூலை 1 கடைசி

டி.இ.டி., விண்ணப்பங்கள் விற்பனை, 6 லட்சத்தை எட்டியுள்ளது; கடைசி நாளான, ஜூலை, 1ம் தேதிக்குள், மேலும், 2 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஆகும் என, டி.ஆர்.பி., எதிர்பார்க்கிறது.

அரசு பள்ளிகளில், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்ய, மூன்றாவது முறையாக, வரும் ஆக., 17, 18 ஆகிய தேதிகளில், டி.இ.டி., தேர்வு (ஆசிரியர் தகுதித் தேர்வு) நடக்கிறது. இதற்கு, கடந்த, 17ம் தேதி முதல், 2,500 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

கடந்த வாரம் வரை, 6 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஆகியிருப்பதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. கடைசி நாளான, ஜூலை, 1ம் தேதிக்குள், மேலும், 2 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஆகும் என, டி.ஆர்.பி., எதிர்பார்க்கிறது.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களும், வந்தபடி உள்ளன. 7 லட்சம் முதல், 7.5 லட்சம் பேர் வரை, தேர்வை எழுதுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இடைநிலை ஆசிரியருக்கான முதல் தாள் தேர்வு, ஆக., 17ம் தேதியும், பட்டதாரி ஆசிரியருக்கான, இரண்டாம் தாள் தேர்வு, 18ம் தேதியும் நடக்கின்றன.

இரு தேர்வுகளையும், 1,000த்திற்கும் மேற்பட்ட மையங்களில் நடத்த, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது. கடந்த தேர்வு, 1,072 மையங்களில் நடந்தது. இந்த எண்ணிக்கைக்கு குறையாமல், தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த தேர்வு மூலம், 15 ஆயிரம் ஆசிரியர், தேர்வு செய்யப்பட உள்ளனர். புதிய ஆசிரியர் அனைவரும், அக்டோபருக்குள், பணி நியமனம் செய்யப்படுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக