முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 22 ஏப்ரல், 2013

நாமக்கல் "மாவட்டத்தில் பகுதி நேர ஆசிரியர் காலிப்பணி விண்ணப்பம் வரவேற்பு: சி.இ.ஓ.,

"மாவட்டத்தில், 31 பகுதி நேர ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு, தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது"  என, சி.இ.ஓ., குமார், கூடுதல் சி.இ.ஓ., கோபிதாஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், நியமனம் செய்யப்பட்ட பகுதி நேர ஆசிரியர் பணியிடங்களில், 31 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதி வாய்ந்த நாடுனர்கள், ஏப்ரல், 27ம் தேதி மாலை, 5 மணிக்குள், விண்ணப்பத்தை, முதன்மை கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

அதற்கான மாதிரி படிவம், முதன்மை கல்வி அலுவலகம், கூடுதல் முதன்மை கல்வி அலுவலகம் (அனைவருக்கும் கல்வி இயக்கம்), மாவட்ட கல்வி அலுவலகத்தில் உள்ள விளம்பர பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.

உடற்கல்வி ஆசிரியர் ஒன்பது, கலை ஆசிரியர் (ஓவியம்) 13, கம்ப்யூட்டர் பயிற்றுனர் இரண்டு, தையல் ஆசிரியர் ஐந்து, இசை ஆசிரியர் இரண்டு என மொத்தம், 31 காலிப்பணியிடம் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக