முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 29 ஏப்ரல், 2013

அரசுப் பள்ளிகளில் சிறப்புப் பாடங்களுக்கும் முக்கியத்துவம் தாருங்கள் – முத்துராமன், APSTA செயலாளர், நாகை மாவட்டம்.

-->
தனியார் பள்ளிகளில் சிறப்புப் பாடங்களான கணினி, இசை, ஓவியம், உடற்கல்வி, யோகா போன்றவற்றிற்கு முக்கியத்துவம் தரப்படுகின்றது. தனியார் பள்ளிகளில், எங்கள் பள்ளியில் அந்த சிறப்புப்பாடம் உண்டு, இந்த சிறப்புப்பாடம் உண்டு என்ற ஆளை மயக்கும் விளம்பரம் அசத்துகிறது. ஒரு உதாரணம் எங்கள் பள்ளியில் நீச்சல் கற்றுத்தருகிறேன் என்றால் விண்ணப்பிக்க கூட்டம் அலைமோதுகிறது.

ஆனால், அரசுப்பள்ளிகளில் சிறப்புப்பாடங்களின் நிலைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை, இந்த இடுகைத்தளதில் உலவிப் பார்த்தால் உங்களுக்கே புரியும்.

மேலும் பல செய்திகளின் வாயிலாகவும் சிறப்புப்பாடம் மற்றும் சிறப்பாசிரியர்களின் நிலைப்பற்றி அனைவரும் அறிவீர்கள்.

இந்நிலையில் அனைத்து பகுதிநேரச் சிறப்பு ஆசிரியர்களின் சங்கமும் மற்ற ஆசிரியர் சங்கங்களும் சிறப்புப்பாடங்களை மேம்மடுத்த, சிறப்பாசிரியர்களை முழுநேர ஆசிரியர்களாக்க கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளன.

இக்கோரிக்கைகளை செவிமடுக்கும் தமிழக அரசு, சிறப்புப் பாடங்களை செம்மை படுத்துவதோடு நில்லாமல் சிறப்பாசிரியர்களையும் முழுநேர, முழு ஊதிய ஆசிரியர்களாக்கி சிறப்பிக்கும் என நம்புகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக