முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

ஞாயிறு, 28 அக்டோபர், 2012

நாகை மாவட்ட அனைத்து பகுதி நேரச் சிறப்பு ஆசிரியர்கள் சங்க நிர்வாக குழுக் கூட்டம்

அனைத்து பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் சங்க நாகை மாவட்ட நிர்வாக குழுக் கூட்டம் இன்று ( 28-10-12) மாலை 4 மணியளவில் கன மழையினூடே நாகையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு அனைத்து பகுதி நேரச் சிறப்பு ஆசிரியர்கள் சங்க மாநிலச் செயற்குழு  உறுப்பினர் திரு. காளிதாஸ் முன்னிலை வகித்தார். நாகை மாவட்ட அனைத்து பகுதி நேரச் சிறப்பு ஆசிரியர்கள் சங்கச் செயலாளர் சோ.முத்துராமன் தலைமை தாங்கினார்.
  • கீழையூர் ஒன்றியப் பொறுப்பாளர் திரு. கே.சிவக்குமார்,
  • கீழ்வேளூர் ஒன்றியப் பொறுப்பாளர் திரு. டி, பெரியார் செல்வம்,
  • நாகப்பட்டினம் ஒன்றியப் பொறுப்பாளர் திரு. என்.கலைச்செல்வன்,
  • திருமருகல் ஒன்றிய புதியப் பொறுப்பாளர் திரு. ஜெ.இளஞ்செழியன் 
ஆகியோர் கலந்து கொண்டு சங்க நிர்வாகம் குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

சிறப்பு அழைப்பாளர்களாக சங்க உருவாக்கத்திற்கு பெரிதும் உதவிய திரு.முரளி மற்றும் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

                                                                                                                இவண்,


                                                                                                       எஸ்.முத்துராமன்,
                                                                                                             செயலாளர்,
                                                                                                APSTA - நாகை மாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக