பகுதி நேர ஆசிரியர்களின் சங்கக் கூட்டத் தீர்மானங்கள்
- பல ஆண்டுகளாக நிரப்பப்படாமலிருந்த சிறப்பாசிரியர்கள் பணியிடங்களை, நிரப்பியமைக்கு அனைத்து பகுதி நேரச் சிறப்பு ஆசிரியர்களின் சங்கத்தின் சார்பாக தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது.
- இப்பணியிடங்கள் தற்காலிக பணியிடங்களாக, பகுதி நேரப் பணியிடங்களாக உள்ளன. இப்பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்ற அரசுக்கு கோரிக்கை விடுக்கப்படுகிறது.
- அனைத்து சிறப்புப்பாடங்களுக்கும் ( கணினி, இசை, ஓவியம், தையல், யோகா, உடற்கல்வி மற்றும் வேளாண்மை) பாடத்திட்டம் முப்பருவங்களுக்கும் தனித்தனியாக வரையறுக்கப்பட வேண்டும்.இக்கையேடுகள் அனைத்து ஆசிரியர்களுக்கும் உடன் வழங்கிட வேண்டும்.
- சமச்சீர் கல்வித் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் வேளையில், அனைத்து இடைநிலைக் கல்வி மாணவர்களும் கணினிக் கல்வி கற்க ஏதுவாக, கணினிக் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும்.
- அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்வி மற்றும் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நியமிக்கப்பட வேண்டும்.
- அரசாணை எண் 177 நாள் :11.11.2011 ன் படி கால அட்டவணை வழங்கிட வேண்டும்.
- கல்வி இணைச் செயல்பாடுகளில் சிறப்புப்பாடங்களை மதிப்பிடுதல் குறித்த அரசாணையை வெளியிட வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக